Tuesday, ,May, 29, 2012
சென்னை::ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் முதல்வராக இருந்தபோது ஆந்திர எல்லையில் உள்ள நக்சலைட்களை ஒடுக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். இதனால், நக்சலைட்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். தமிழக கவர்னராக அவர் பொறுப்பேற்ற பிறகும்கூட நக்சலைட்டுகள் அவர் மீதான வெறுப்பை கைவிடவில்லை என்று தெரிகிறது. இதை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. நக்சல்கள் அச்சுறுத்தல் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம் ரோசய்யாவுக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், ரோசய்யா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கவர்னர் என்ற முறையில் ரோசய்யாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இனி அவருக்கு சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்

No comments:
Post a Comment