Tuesday, May 29, 2012

கத்தார் ஷாப்பிங் மாலில் தீ : 13 குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி பலி!

Tuesday, ,May, 29, 2012
தோஹா::கத்தார் நாட்டின் மிக பிரபலமான ஷாப்பிங் மாலில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 13 குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ளது வில்லாஜியோ ஷாப்பிங் மால். மிக பிரபலமான இந்த மால் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இந்த மாலில் ஐஸ் விளையாட்டு உள்பட பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. நேற்று பிற்பகல் ஏராளமான மக்கள் ஷாப்பிங் மாலில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது. அதை பார்த்து மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் தீயில் கருகி 13 குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி இறந்தனர். அவர்களில் 7 சிறுமிகள், 6 சிறுவர்கள் அடங்குவர். நான்கு பெண் ஆசிரியைகள் பலியாயினர். மேலும், மீட்புப் படையை சேர்ந்த 2 பேரும் தீயில் கருகினர் என்று கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தில் இறந்த சிறுவர்கள் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment