Monday, May 28, 2012

புலிச் சந்தேக நபர்கள் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுகள் இருக்குமாயின் சட்டரீதியாக அணுக வேண்டும் - சரத் பொன்சேக்கா!

Monday, ,May, 28, 2012
இலங்கை::தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் அரசியல் கைதிகள் எனவும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருக்குமாயின் அவர்களுக்கு எதிராக அதனை முன்வைக்க வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். விடுதலைப்புலிச் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லையென்றால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். புலி உறுப்பினர்கள் என்றாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களை அரசியல் கைதிகள் எனக் கருதி, அவர்கள் குற்றம் செய்திருந்தால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

புலி உறுப்பினர் உட்பட அநீதியாக எவரை தடுத்து வைத்திருந்தாலும் தான் அனை எதிர்ப்பதாக தெரிவித்துள்ள பொன்சேக்கா, அவர்களை விடுதலை செய்யும் போராட்டத்தை மேற்கொள்வது தனது பொறுப்பு என கருதுவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்கிய ஜே.வி.பி அடிப்படைவாத இடதுசாரி கொள்கைகளை கொண்ட கட்சி என விபரித்து;ளள பொன்சேக்கா, தன்னால் அப்படியான அடிப்படைவாத கட்சிகளுடன் இணைய முடியாது என்பதால், ஏனைய கட்சிகளுடன் இணையாது தமது கட்சியில் இருந்து அரசியலில் ஈடுபட போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பல பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகிறது என்ற ஆணைக்குழுவின் பரிந்துரையை நேரடியாகவே ஏற்றுக்கொள்ளவதாகவும் பொன்சேக்கா கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் பிரதான இனங்ளுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைக்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் போர் குற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தான் நிராகரிப்பதாக தெரிவித்துள்ள பொன்சேக்கா, அவ்வாறான போர் குற்றம் குறித்து குற்றச்சாட்டுகள் இருக்குமாயின் அது பற்றி விசாரணை நடத்தி பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment