Monday, ,May, 28, 2012
சென்னை::பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பங்க் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கடும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் டீசல் தேடி பங்க்குகளை ஒரே நேரத்தில் முற்றுகையிடுகின்றன. ஒரு சில நேரங்களில் கைகலப்பும் ஏற்படுகிறது. இது குறித்து பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் கூறுகையில், டீசல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனால், நிறைய பங்க்குகள் கடந்த சில தினங்களாக மூடியே வைக்கப்பட்டுள்ளது. டீசல் கிடைக்கும் பங்க்குகளுக்கு அனைவரும் செல்கின்றனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் கோபமடைகின்றனர். இதனால், பங்கு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை செல்கிறது. அதனால், பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்...
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதி!
சென்னை: சென்னையில் 80 சதவீத பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் குறைந்து காணப்பட்டது. இதனால் பஸ், ரயில்களில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிகிறது. மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, பெட்ரோல் விலையை சற்று குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால் இப்போது அதிக விலை கொடுத்து வாங்கும் பெட்ரோலை குறைத்து விற்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் நஷ்டம் ஏற்படும் என்று கருதி, பெட்ரோலை வாங்கி விற்க பங்க் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தற்போது இருப்பு உள்ள பெட்ரோலை மட்டும் சில பங்க்கில் விற்கின்றனர். பல பெட்ரோல் பங்க்குகளில் இருப்பும் தீர்ந்துவிட்டதால் நோ ஸ்டாக் போர்டு போட்டுவிட்டனர். தமிழகம் முழுவதும் ஏராளமான பங்க்குகள் மூடப்பட்டு உள்ளன. சென்னையில் 80 சதவீத பங்க்குகள் மூடப்பட்டுவிட்டன. ஒரு சில பங்க்கில் மட்டும் பெட்ரோல் விற்கப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எந்த ஏரியாவில் பெட்ரோல் கிடைக்கும் என்று பைக், கார்களில் சுற்றி சுற்றியே பெட்ரோல் தீர்ந்து போனதால், அவற்றை ஓரங்கட்டிவிட்டு பாட்டிலுடன் பெட்ரோலுக்கு அலைகின்றனர். பலர் தங்கள் கார், பைக்குகளை வீடுகளிலும், அலுவலகங்களிலும் நிறுத்தி விட்டு பஸ், ரயில், ஆட்டோவில் செல்கின்றனர். இதனால் பஸ், ரயில்களில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் காணப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் சவாரி செல்ல 2 மடங்குக்கு அதிகமாக பணம் கேட்கின்றனர் என்று பொதுமக்கள் புகார் கூறினர்.
கார், பைக் இயக்கப்படாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை, பிராட்வே, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனங்களை அவ்வளவாக காண முடியவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சென்னையில் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment