Tuesday, ,May, 29, 2012
ஊத்துக்கோட்டை::ஓரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்க முடியாத விஜயகாந்துக்கு முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேச தகுதி கிடையாது என்று அமைச்சர் ரமணா கூறினார். கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக சார்பில், ஊத்துக்கோட்டை அருகே கச்சூரில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. கூட்டத்துக்கு, கலவை ஊராட்சி தலைவர் பிஎம்.பிரசாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கந்தசாமி, ஒன்றிய குழு தலைவர்கள் அம்மு மாதவன், அம்மினி மகேந்திரன், ஒன்றிய செயலாளர் கோபால், ஊத்துக்கோட்டை நகர செயலாளர் ராஜ ராசமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் வெங்கட்ரமணா, பேரவை செயலாளர் கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் லைலா, வக்கீல் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். அமைச் சர் ரமணா, தலைமை கழக பேச்சாளர் ஜெமினி ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
அமைச்சர் ரமணா பேசியதாவது:
தமிழக அரசின் சாதனையாக 36 அரசு கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. கம்ப்யூட்டர் வாங்க 1500 கோடி ஒதுக்கப்படுகிறது. எங்களுடன் கூட்டணி சேராமல் இருக்கும்போது தேமுதிக ஒரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்க முடியவில்லை. அந்த கட்சி தலைவர் விஜயகாந்த், அதிமுகவுக்கு போட்டியா? சட்டமன்றத்துக்கு வராத விஜயகாந்த்துக்கு, முதல்வர் ஜெயலலிதா பற்றி பேச தகுதி கிடையாது. தன்னை சின்ன எம்ஜிஆர் என்று கூறுகிறார். இவர் நடித்த ஓரு படத்திலாவது எம்ஜிஆர் படத்தை காட்டியது உண்டா? எம்ஜிஆருக்கு விழா எடுத்தாரா? சட்டமன்றத்தில் முதல்வர் கேட்கும் கேள்விக்கு தேமுதிக எம்எல்ஏக்களால் பதில் சொல்ல முடியவில்லை. தமிழகத்தில் மின்தடை பிரச்னை விரைவில் தீரும். பூண்டி ஒன்றியத்தில் இன்னும் 4 வருடத்தில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும். இவ்வாறு ரமணா பேசினார்.

No comments:
Post a Comment