Tuesday, May 29, 2012

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை!

Tuesday, ,May, 29, 2012
இலங்கை::கொலை வழக்கொன்றில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

தங்காலை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி சந்திரசேன ராஜபக்ஸ இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வலஸ்முள்ள பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்ததாக குறித்த மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆறுபேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களில் ஒருவர் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இருவர் இந்த வழக்கில் நிரபராதிகள் என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment