Tuesday, May 1, 2012

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இணைந்து நடத்தும் மே தின கூட்டமும் ஊர்வலமும்!

Tuesday, May, 01, 2012
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இணைந்து நடத்தும் மே தின கூட்டமும் ஊர்வலமும் யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்றுது.
யாழ், நல்லூர் கோயிலடியிலிருந்து இன்று பிற்பகல் 2.15 மணியளவில் ஆரம்பமான இந்த மே தின ஊர்வலத்தில் தமிழ்த் தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் எம்.பி.க்களான ரவி கருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க உட்பட அக்கட்சியின் ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம், யாழ், குருநகர் சென்ட்ரப் மைதானம் வரை சென்றுது..

நிரந்தரமான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டு தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். ஒருமித்த இலங்கைக்குள் பிரிவினை ஏற்படாமல் நீதியான நியாயமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என யாழ். குருநகர் சென்றோக்ஸ் மைதானத்தில் இன்று செவ்வாய் மாலை நடைபெற்ற எதிர்கட்சிகளின் மேதினக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அரசு செயற்பட்டு தமிழ் மக்களின் துன்பங்கள் பற்றி அரசு அக்கறையற்று இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். இனங்கள் ஒருமித்து ஒற்றுமையாக வாழ்வதற்கு இலங்கையில் இடமுண்டு. அவர்கள் ஒற்றுமையாக வாழவைப்பதற்கு தீர்வு ஒன்று முக்கியமானது.

சில அரசியல்வாதிகள் மக்களைப் பிரித்து வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள். தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்விதம் செய்கின்றார்கள்

இவ்விதமான தீயசிந்தனைக்கு இடம் கொடுக்காமல் நாங்கள் நடந்து கொள்ள வேண்டும். யுத்தம் முடிந்த பின்னரும் மக்களின் உடனடித் தேவைகள் பூர்ததி செய்யப்பட வில்லை.

தேசியப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்காக அரசிற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றோம். ஒருமித்த இலங்கைக்குள் பிரிவினை ஏற்படாமல் நீதியான நியாயமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

நாங்கள் அரசுடன் பேசியிருக்கின்றோம் எந்த விடயத்திலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வை முன்வைத்தால் புலம் பெயர் மக்களின் உதவிகளும் அதிகரிக்கும்" என்றார்.

No comments:

Post a Comment