Wednesday,May,02,2012
புதுடில்லி::முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கவுள்ளது. இது தொடர்பான உத்தரவை, நேற்று பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கு குறித்த ஆவணங்களை, இரண்டு வாரங்களுக்குள் அனுப்பி வைக்கும்படி, சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, கடந்த 1999ல், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தங்களின் தண்டனையை குறைக்கக்கோரி, மூன்று பேரும், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.கடந்தாண்டு ஆகஸ்டில், இவர்களின் கருணை மனுக்களை, ஜனாதிபதி பிரதிபா நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, இவர்களுக்கு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
குறைக்க கோரிக்கை: இந்நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும், சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்தனர். அதில், "எங்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கு, 11 ஆண்டு கால அவகாசம் எடுக்கப்பட்டுள்ளது.எனவே, எங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், இவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கு, இடைக்காலத் தடை விதித்தது.
இணக்கமான சூழல் இல்லை: இதையடுத்து, காங்கிரசைச் சேர்ந்த எல்.கே.வெங்கட் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:
ராஜிவ் கொலையாளிகள் தாக்கல் செய்த வழக்கு, தமிழகத்தில் நடந்தால், அதன் விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது. விசாரணையின்போது, பதட்டமான சூழல் ஏற்படும். இது, தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, சாதகமான போக்கை ஏற்படுத்திவிடும்.சென்னை ஐகோர்ட்டில், இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, நீதித்துறை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.கோர்ட் வளாகத்தில், 5,000க்கும் அதிகமானோர் கூடி நின்று, வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினர். தண்டனையை நிறைவேற்றுவதற்கு, ஐகோர்ட் தடைவிதித்ததை அடுத்து, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும், தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, விசாரணைக்கு இணக்கமான சூழலை ஏற்படுத்தும் வகையில், இந்த வழக்கின் விசாரணையை, தமிழகத்துக்கு வெளியில், வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசு பதில்: இந்த மனு மீதான கடந்த விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில்,
"சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தால், பதட்டமான சூழல் ஏற்படும் என கூறப்படுவது, தவறானது. இந்த வழக்கை, வேறு கோர்ட்டுக்கு மாற்றக்கூடாது' என, பதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.தண்டனை விதிக்கப்பட்ட மூவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும், "ஒரு வழக்கின் விசாரணையை, ஒரு கோர்ட்டிலிருந்து வேறு கோர்ட்டுக்கு மாற்றும்படி, அட்டர்னி ஜெனரல் அல்லது வழக்குடன் தொடர்புடையவர்கள் மட்டுமே, மனு தாக்கல் செய்ய வேண்டும். எனவே, விதிமுறைப்படி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது செல்லாது' என்றார்.
மாற்ற உத்தரவு : நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:இந்த வழக்கை, இனிமேல் சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும்.
கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏற்படும் தாமதம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்ற மனுக்களுடன் சேர்த்து, இந்த மூவரின் மனுக்களும் விசாரிக்கப்படும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கருணை மனுக்களின் முக்கியத்துவம் கருதி, இந்த முடிவுக்கு வந்துள்ளோம். ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை, நீதியின் நலன் கருதி, சென்னை ஐகோர்ட்டில் இருந்து, சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிடுகிறோம்.இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், இரண்டு வாரங்களுக்குள், சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பும்படி, சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும் ஜூலை 10ம் தேதி நடக்கும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி வரவேற்றுள்ளார்.

No comments:
Post a Comment