Wednesday, May 02, 2012
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம் கடல் பகுதியில் தொடரும் கடத்தலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக பீடி, போதைப்பொருட்கள், ஜவுளிகள், கடல் அட்டைகள், செம்மரக்கட்டை போன்றவை கடத்துவது தொடர்கிறது. கடல் பகுதியில் கண்காணிப்பு தொய்வால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடத்தல் குறித்து உளவுப்பிரிவினருக்கு சிலர் தகவல் அளித்து வந்தனர். இவர்களை பற்றிய தகவல்களை, கடத்தல்காரர்களுக்கு, உளவுப்பிரிவில் உள்ள சிலர் தெரிவித்து விடுவதால், "இன்பார்மர்'கள் பீதியடைந்து தற்போது தகவல் தெரிவிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும், கடத்தல் பொருட்கள் பிடிபட்டாலும் இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குள் முழுமையான ஒருங்கிணைப்பு, கருத்து பகிர்வு இல்லாததும் இதற்கு ஒரு காரணம்.
சமீபத்தில் இலங்கைக்கு செம்மரக்கட்டைகள் ஏற்றிச்செல்ல முயன்ற படகை, கியூ பிரிவு போலீசார் பிடித்து கொடுத்தும், இதை கடத்தி செல்ல முயன்றவர்களையும், படகு உரிமையாளரையும் கண்டுபிடிக்க முடியாமல் கஸ்டம்ஸ் அதிகாரிகள் தவிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் கடத்தல் புள்ளிகள் எவ்வித தடையும் இன்றி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியும், புலனாய்வு பிரிவை சீரமைத்தும், பாதுகாப்பு ஏஜன்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கடத்தலை தடுக்க முடியும்.

No comments:
Post a Comment