Tuesday, May 29, 2012

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

Tuesday, ,May, 29, 2012
இலங்கை::மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இலங்கைக்கு இன்று வருகைதரவுள்ளார்.

இவர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் பல உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சிங்கப்பூர் வர்த்தக அமைப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டை அவர் நாளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டிற்கு வருகைதந்துள்ள ஈரான் வெளிவிவகார பிரதியமைச்சர் அப்பாஸ் அராஜி மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்றையதினம் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment