Tuesday, May 29, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்து சென்றார்!

Tuesday, ,May, 29, 2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்துக்கு இன்று அதிகாலை 1.20 அளவில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஸ்ரீ லங்கன் வானூர்தி சேவைக்குச் சொந்தமான யு.எல்.886 என்ற வானூர்திலேயே அவர் பயணித்ததாக எமது வானூர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பிரதமர் யின்லக் ஷின்வாத்ராவுடன் அவர் இன்று இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு தாய்லாந்து பிரதமரால் மதியபோசன விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுக்கு அமைய நிதி ஆதாரங்களை பறிமாற்றிக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, இருநாடுகளினதும், வெளிவிவகாரத்துறை அமைச்சுகளிடையே, ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இதனிடையே, நாளைய தினம் மாலை மகா சக்ரி சிறிதொன் ராஜகுமாரியை ஸ்ரா பெத்தும் மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.

ஆரம்ப காலம் தொட்டு இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில், சமய, கலாசார, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் நிலவிய அதேவேளை, இரு நாடுகளுக்கு இடையே, ராஜதந்திர உறவுகள் கடந்த 1995 ம் ஆண்டே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டன...

தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அந்நாட்டு பிரதிப் பிரதமர், சுவர்ணாபிமானி விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (29) அதிகாலை தாய்லாந்து சென்றார்.

No comments:

Post a Comment