Monday, May 28, 2012

யாழ் தென்மராட்சி நாவற்குழியில் எட்டுவயதுப் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது!

Monday, ,May, 28, 2012
இலங்கை::யாழ்ப்பாணம் தென்மராட்சி நாவற்குழியில் எட்டுவயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.

சிறுமியின் உறவினர் எனக் கூறப்படும் 19 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை கடந்த 2 வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த விடயம் எவருக்கும் தெரியாமலே இருந்தது. எனினும் நேற்றுமுன்தினம் சிறுமி பாடசாலையில் திடீரென மயக்கமடைந்து விழுந்தாள். இது தொடர்பாக ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரித்த போதே குறித்த இளைஞரால் தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வரும் விடயத்தை சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாவகச்சேரி காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் துரித நடவடிக்கையில் இறங்கிய காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் நாவற்குழியைச் சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்தனர். இவர் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை விசாரணைக்கு உட்படுத்திய நீதிவான் குறித்த சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்...

பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த கைது!

வர்த்தகரொருவரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துனேஷ் கங்கந்த இன்று காலை சட்டத்தரணி ஊடாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர், கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் வர்த்தகர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், தனியார் வைத்தியசாலையொன்றில் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment