Monday, ,May, 28, 2012
புதுக்கோட்டை::புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரம் களை கட்டிவிட்டது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்
கொண்ட 52 பேர் குழுவினர் தொகுதியில் முற்றுகையிட்டுள்ளனர். தேமுதிகவில் 28 எம்எல்ஏக்கள் கொண்ட குழுவினரும் வாக்கு சேகரிப்பில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 12ம் தேதி நடக்கிறது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகிர் உசேன், ஐஜேகே சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். திமுக, மதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. தேமுதிக வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கி 25ம் தேதியுடன் முடிந்தது. மனுக்கள் பரிசீலனை 26ம் தேதி நடந்தது. இதில் 25 மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிகிறது. இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அலுவலர் ஆர்டிஓ முத்துமாரி வெளியிடுகிறார். அதன்பின் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வாக்கு பதிவு ஜூன் 12-ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 15ம் தேதி நடத்தப்படுகிறது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டமானுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட, 32 அமைச்சர்கள் உள்பட 52 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை கட்சி தலைவர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இவர்கள் நேற்று முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக அமைச்சர்கள், பொறுப்பாளர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களுக்கு பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகள் மாவட்ட அதிமுக சார்பில் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைவரும் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தேமுதிக சார்பில் எம்எல்ஏக்கள் 28 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேன் இன்று திருவப்பூர், மியூசியம், திருவப்பூர் பள்ளிவாசல், கோவில்பட்டி, பாலன் நகர், கருவப்பிளான் கேட், தாவூத் மில் ஆகிய பகுதிகளில், மாநில நிர்வாகிகள் இளங்கோவன், பார்த்தசாரதி, சந்திரகுமார், ஆஸ்டின், நகர செயலாளர் சிங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் ஞானம் உள்ளிட்டோருடன் சென்று வாக்கு சேகரித்தார். ஐஜேகே மற்றும் சுயேச்சைகள் தேர்தல் களத்தில் இருந்தாலும், அதிமுக - தேமுதிக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதனால் இவ்விரு கட்சியினர் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதனால் புதுக்கோட்டையில் பிரசாரம் களை கட்டியுள்ளது. இந்நிலையில்,
அமைச்சர்களின் பிரசாரத்தில் தேர்தல் விதிமீறல் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வீடியோவில் பிரசாரம் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக ஆணையம்
சார்பில் பறக்கும் படை தாசில்தார், உள்ளூர் போலீஸ், துணை ராணுவம், ஒரு வீடியோகிராபர் என 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள்
அமைச்சர்களின் வாகனங்களை பின்தொடர்ந்து பிரசாரத்தை வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர்.
9-ம் தேதி ஜெ. பிரசாரம்
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஜெயலலிதா வரும் 9-ம் தேதி புதுக்கோட்டை வருகிறார். அன்றைய தினம் முக்கிய பகுதியில் ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது. ஜூன் 5-ம் தேதி தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார். புதுகையில் தங்கியிருந்து தொடர்ந்து அவர் பிரசாரம் செய்கிறார்.

No comments:
Post a Comment