Wednesday, May 2, 2012

புலிகள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்ததால் தமது ஆதரவு வழங்கப்படும் - கருணாநிதி!தெரிவித்ததாக திவயின!

Wednesday,May,02,2012
இலங்கை::புலிகள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்ததால் அதற்கு தமது ஆதரவு வழங்கப்படும் என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்ததாக திவயின கூறியுள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்வி பதிலளித்துள்ள அவர், சுதந்திர போராட்டத்தை நடத்தும் பிரபாகரன் உயிரிழக்கவில்லை என தெரிவித்ததாகவும் இந்தியா முழுவதும் தமிழீழ ஆதரவு அமைப்பின் அலுவலகங்களை திறந்து, அதற்கு ஆதரவு வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்போம் எனவும் கருணாநிதி கூறியதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களை அழித்தது இந்திய அமைதிப்படையே என குற்றம் சுமத்தியுள்ள கருணாநிதி, நாடு திரும்பிய இந்திய அமைதிப்படையினரை வரவேற்க தான் செல்லவில்லை என தெரிவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment