Thursday,May,03,2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தம்மிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்கும் முயற்சி எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கோரிக்கைக்கு சாதகமான பதிலை வெளியிடுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி, முஸ்லிம் காங்கிரஸிடம் கோரியமை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிலேயே இந்த விடயம் பற்றி அறியக் கிடைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment