Thursday, May 3, 2012

இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தி நிலையான அரசியல் தீர்வுக்கு தயார் என்ற சம்பந்தன் எம்.பி.யின் அறிவிப்பு நாட்டில் உருவாகியுள்ள புரட்சிகரமாற்றமாகும்-திஸ்ஸ

Thursday,May,03,2012
இலங்கை::இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தி நிலையான அரசியல் தீர்வுக்கு தயார் என்ற சம்பந்தன் எம்.பி.யின் அறிவிப்பு நாட்டில் உருவாகியுள்ள புரட்சிகரமாற்றமாகும். அரசாங்கம் இதனை வரவேற்க வேண்டும் என்று சிரேஷ்ட அமைச்சரும் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருந்த சர்வகட்சிக் குழுவின் தலைவருமான திஸ்ஸ விதாரண தெவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு எந்தத் தரப்பும் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐ.தே.க.தலைமையிலான பொது எதிர்க்கட்சிகளின் மே தின கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி. யுமான இரா. சம்பந்தன் தேசியக் கொடியை ஏந்தியதுடன் நிலையான அரசியல் தீர்வுக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென்று அறிவித்திருந்தார்.

இந்த கருத்து குறித்து கருத்து வெளியிடும் போதே விஞ்ஞான தொழில்நுட்பத் துறை சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது இந்த நிலைப் பாட்டை தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடியை கையிலெடுத்து அசைக்கும் சம்பந்தன் எம்.பி.யின் மனமாற்றம் நாட்டில் இடம்பெறப் போகும் புரட்சிகரமான இன நல்லிணக்கத்திற்கு சிறந்த தொரு எடுத்துக் காட்டாகும். இது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கின்றது. அரசாங்கம் இதனை வரவேற்க வேண்டும். ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமையவே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இது தொடர்பில் கூட்டமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நிபந்தனை அத்தோடு பாராளுமன்றத் தெரிவுக் குழு ஊடாக பேச்சு வார்த்தைகளை நடத்தி கருத்துப் பமாற்றங்களை மேற்கொள்வதன் மூலமே நிலையான அரசியல் தீர்வை நோக்கி நகர முடியும். ஆனால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொள்வதற்காக அரசாங்கமோ ஐ.தே.கயோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறெந்த அரசியல் கட்சிகளும் நிபந்தனைகளை விதிக்கலாகாது.

நிபந்தனைகள் விதிப்பதென்பது அரசியல் தீர்வை நோக்கி நகர்வதில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும். எனவே நிபந்தனைகளின்றி பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் தெரிவுக் குழுவுக்கு வர வேண்டும்.

எதிர்க்கட்சிகள் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதன் மூலம் அரசியல் தீர்வு தொடர்பான ஆளும் தரப்பு எதிர்த்தரப்பினன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும். அவ்வாறான நிலைமை இல்லாமல் தீர்வைக் கண்டு விட முடியாது.

அரசியல் தீர்வு என்னவென்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் நிபந்தனையுடன் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளத் தயாரென்ற பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே நிபந்தனைகளை கைவிட்டு ஐ.தே.க. தெரிவுக் குழுவில் இணைய வேண்டும்.சர்வகட்சி மாநாடு சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகள் மத்தியில் இணக்கப்பாடுகள் காணப்பட்டன. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகவும் பெரும்பாலான விடயங்களில் ஜாதிக ஹெல உறுமயவும் இணங்கியது.

ஆனால் காவற்துறை, காணி உட்பட சில விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத் துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விடயம் தொடர்பில் இறுதித் தீர்வைக் காண முடியாமல் போனதால் ஹெல உறுமய வெளியேறியது.எனவே இவை தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

அரசியலமைப்பு அதிகாரத்தைப் பரவலாக்குவதற்காக அரசியலமைப்பில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும். மத்திய அரசாங்கத்தையும் பங்குதாரர்களாக்கிக் கொண்டு அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்குவது தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். தேவையானால் புதிய அரசியலமைப்பையும் உருவாக்கலாம் என திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment