Thursday,May,03,2012
இலங்கை::நாட்டைப் பிரிக்கும் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் சதித் திட்டம் தற்போது அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் அவதானத்துடன் இராஜதந்திர காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சரத்பொன்சேகாவை ஐ.தே.க. வின் தலைமைத்துவத் திற்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சி நிரலையும் அமெரிக்கா தயாரித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர, ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், இந்திய விஜயம் மற்றும் எமது நாட்டுக்கு எதிரான அறிக்கை என்பவற்றைத் தொடர்ந்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவையனைத்தும் பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்குவதற்கான இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன இணைந்து அரங்கேற்றும் சதித்திட்டத்தின் உச்சக்கட்டமாகும். இது பயங்கரமான சூழ் நிலையாகும்.
மதவாதம் இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு சதித்திட்டங்கள் நாட்டுக்குள் முன்னெடுக்கப்படுகின்றன. முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படும் பின்னணியிலும் அமெரிக்காவின் இலங்கை முகவர்கள் செயற்படுகின்றன.
இதன் மூலம் உலக முஸ்லிம் நாடுகள் எமக்கு வழங்கி வரும் ஆதரவை இல்லா தொழிப்பதே திட்டமாகும். எனவே அரசாங்கம் இதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய வேண்டும். மதவாதத்தை தூண்ட எடுக்கப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
லிபியாவைப் போன்று இலங்கையில் புலி ஆதரவாளர்களான இளைஞர்களையும் முஸ்லிம் இளைஞர்களையும் மோத வைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது. லிபியாவில் காண்பித்த விளையாட்டை இங்கு காண்பிக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மதவாதத்தை காண்பித்து பயங்கரவாதத்திற்குள் உள்ளிடுவதே இத்திட்டமாகும்.
சம்பந்தன் இலங்கையின் தேசியக் கொடியை சம்பந்தன் கையில் எடுத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.செல்வநாயகத்தின் கோட்பாட்டை கையிலெடுத்துள்ளார். அதாவது ஒன்று பட்ட நாட்டுக்குள் அதிகார பரவலாக்கலை கோரியுள்ளார்.
அதாவது முதலில் காணி, காவற்துறை அதிகாரமில்லாத பரவலாக்கலை பெற்றுக் கொண்டு அதன் பின்னர் அவ் அதிகாரங்களை இந்தியா, அமெரிக்காவின் அழுத்தங்களுடன் பெற்றுக்கொள்வதே திட்டமாகும். இது நிறைவேறினால் தனித் தமிழீழம் தானாக உருவாகும் .
மேதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு ரணில் சஜித் என்ற இரண்டு குதிரைகள் மீதும் அமெரிக்கா கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. ரணிலையும் சம்பந்தனையும் இணைத்து யாழ்பாணத்தில் மேதினம் நடத்தப்பட்டது. இதனால் ரணிலுக்கு உள்ள எஞ்சிய ஆதரவும் இல்லாது போகும்.
மறுபுறம் சஜித்தை தூண்டிவிட்டு சரத் பொன்சேகாவை ஐ.தே.க.வின் தலைமைத் துவத்திற்கு கொண்டு வந்து ரணிலை வெளியேற்றி ஆட்சியை கவிழ்க்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதா இல்லையா? என்பதை ஆராய பிரிட்டனுக்கு அதிகாரம் கிடையாது. பிரிட்டன் தனது வேலையை பார்த்துக் கொண்டு சிவனே என்று இருக்க வேண்டும். அதை விடுத்து எமது பிரச்சினையில் மூக்கை நுழைத்தால் மூக்குடைபடும்.
அரசாங்கம் இலங்கையைப் பிரித்து பிரபாகரனின் கனவை நனவாக்க பலனை சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ் நிலையில் அரசாங்கம் விழிப்பாக செயல் பட வேண்டும். இந்த சதிக்காரர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment