இலங்கை ஊடகங்கள் நாட்டுப்பற்றுடன் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும்: தமது நாட்டுக்காக வேறு நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு ஊடகங்கள் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
Sunday, April 01, 2012
இலங்கை::அநேக வெளிநாட்டு ஊடகங்கள் தமது நாட்டுக்காகவும், நாட்டின் சக்திக்காகவும் உலகின் வேறு நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தரம் குறைந்துள்ளதாகவும், இந்த ஒழுக்கமற்ற செயல்பாடுகளுக்கு இன்று இலங்கை மக்களும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
அரச தகவல் திணைக்களத்தில் புதிய ஊடக அபிவிருத்தி மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :-
மேற்குலக நாடுகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிலையில் தாய் நாட்டுப்பற்றுள்ள இலங்கை ஊடகங்கள் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் இத்தகைய சவால்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் உரிமையைக் கொண்டுள்ளன.
இதேவேளை கொலை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் சில ஊடகங்கள் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க செயல்பாடுகள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனாலேயே தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
முன்னர் கொழும்பு நகரில் குப்பைகள் கொட்டப்பட்டு வீதிகள் துர்நாற்றம் எடுத்ததாக செய்திகளை வெளியிட்ட பல ஊடகங்கள் இன்று கொழும்பு நகரம் தூய்மையாகவும், அழகாகவும் காணப்படுவது பற்றி செய்திகளை வெளியிடுவதில் பின் நிற்கின்றன.
குற்றச் செயல்கள், தவறுகள் குறைபாடுகள் என்பனவற்றை மட்டும் வெளிப்படுத்துவதல்ல ஊடகங்களின் கடமை. நாட்டில் நடக்கும் நல்ல விடயங்களையும் வெளிப்படுத்துவதும் ஊடகங்களின் முக்கிய கடமைதான் என்று உணர்ந்து ஊடகங்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.
ரூபா 374 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊடக மத்திய நிலையம் பல நவீன வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment