Sunday, April 1, 2012

இன்று காலை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஐவர் பலி!

Sunday, April 01, 2012
இலங்கை::கடுவெல மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் இன்று அதிகாலை இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கடுவெல - கொத்தலாவல பிரதேசத்தில் பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதன்போது பஸ்ஸில் பயணித்த எட்டுப் பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கேகாலை - மொலகொட பிரதேசத்தில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தோர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment