Sunday, April 01, 2012
இலங்கை::மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் கடத்தப்பட்ட 21 வயது இளைஞரை மீட்ட பொலிஸார், சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.
பால்சேனை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் ஆனந்தகிசோர் என்ற குறித்த இளைஞன் சம்பவதினம் வீட்டிலிருந்த வேளை வாகனமொன்றில் வந்த ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லபட்டிருந்தார்.
சேருவிலை பிரதேசத்திலுள்ள தெகியத்தை கிராமத்தில் இந்த இளைஞரை மீட்ட போது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் சாரதி ஒருவர் சிங்களவர் என்றும் ஏனைய இருவரும் அதியமான்கேணியைச் சேர்ந்த தமிழர்கள் என்றும் இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்.
வீதித் தடையில் கடமையிலிருந்த பொலிஸாரின் புத்தி சாதுரியமான நடவடிக்கைகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் கிடைத்த தகவல்களை வைத்தே இந்த நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், கடத்தல்காரர்கள் கோடிக் கணக்கில் கப்பம் கோரியதாகவும் குறிப்பிட்டார்.
இந்த கடத்தல் சம்பவத்திற்கு அரசியல் பின்னணி இருப்பதாக வெளியான செய்திகளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முற்றாக நிராகரித்தார்.

No comments:
Post a Comment