Sunday, April 1, 2012

இலங்கை அகதிகளுக்கும் மருத்துவகாப்பீட்டு திட்டம் அமல்!

Sunday, April 01, 2012
திண்டுக்கல்::அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அகதிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. இங்குள்ள 117 முகாம்களில், இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில், குடும்பத் தலைவர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
காப்பீட்டுத் திட்டம்:முதல்வராக ஜெ., பொறுப்பேற்றவுடன், விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தார். இதில், உயர்தர சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தை அகதிகளுக்கும் விரிவாக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்களை, அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். விரிவாக்கம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment