Sunday, April 1, 2012

ஜெனீவா பிரேரணை தொடர்பில் உத்தியோகப்பூர்வ நிலைபாட்டை அறிவிக்கவும் - சர்வ மதப் பேரவை!

Sunday, April 01, 2012
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை அறிவிக்குமாறு சர்வ மதப் பேரவை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பாக அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுவரும் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பிலும், சர்வதேசம் குறித்தும் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளதாக சர்வ மதப் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை அறிவிக்குமாறு சர்வ மதப் பேரவையின் செயலாளர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார அனுநாயக்க தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்கத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த பிரேரணை ஒரு சிறந்த வாய்ப்பாகும் என அரசாங்கம் எண்ணுமானால், அதற்கு ஆசிர்வாதமும், ஒத்துழைப்பும் வழங்குவதில் சர்வ மதப் பேரவை மகிழ்ச்சியடையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் தலைமைத்துவம் மற்றும் சிவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான பங்களிப்பு, இலங்கை மீதான காரணமற்ற விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமான பதிலாக அமையுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பல மதங்களையும் சார்ந்த 25 க்கும் அதிகமான சமயத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment