Sunday, April 1, 2012

காஷ்மீரில் சிறப்பு ஆயுதப்படைக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரங்கள் நீக்கமா?: ப.சிதம்பரம்!

Sunday, April 01, 2012
புதுடெல்லி::காஷ்மீரில் ஆயுத படைக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரங்கள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும், இது போன்ற சிறப்பு அதிகாரஙக்ளுக்கு ஜனநாயக இடமில்லை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆயுதப்படைக்கான அதிகார வரம்பு குறித்தான தீர்மானம், இந்திய பாதுகாப்பு கமிட்டியின் முன் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது: மூன்று முக்கியமான அதிகாரங்கள் சிறப்பு ஆயுதப்படைக்கு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்த அவர் எந்தெந்த அதிகாரங்கள் வேண்டும் என்று குறிப்பிடவில்லை இருந்த போதும் பத்திரிகைகளுக்கு கிடைத்த தகவலின் படி, வாரண்ட் இல்லாமல் கைது செய்யும் உரிமை, தீவிரவாதிகள் என்று தெரிந்தால் சுட்டுக்கொல்லும் உரிமை, தேவைப்பட்ட இடத்தில் சிறைச்சாலை அமைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த அதிகாரங்களின் சாராம்சமாக இருக்கும் எனத் தெரிகிறது.

சிறப்பு ஆயுதப்படையின் மீதான ஐ.நா. அமைப்பின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது போன்ற கருத்திற்கு மக்களிடையே ஆதரவான கருத்துகளும் எதிரான கருத்துகளும் இருப்பதால் இது குறித்து முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment