Saturday, April 28, 2012

நான்கு விபத்துக்களில் ஐவர் பலி!

Saturday, April, 28, 2012
இலங்கை::கொகரெல்ல, மொனராகலை, பியகம மற்றும் வெலிகம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

வெலிகம பகுதியில் ஜீப் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜீப்பின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கரெல்ல, கொஸ்கெலே பிரதேசத்தில் வேன் ஒன்றில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சந்தேகத்தில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை, பொத்துவில் பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பியிய பண்டாரவத்தை பகுதியில் டிப்பர் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் ரிப்பர் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment