Saturday, April 28, 2012

பாகிஸ்தானில் பதற்றம் விமானத்தை கடத்துவதாக பயணி திடீர் மிரட்டல்!

Saturday, April, 28, 2012
கராச்சி::விமான பணிப்பெண்களுடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரம் அடைந்த பயணி, விமானத்தை கடத்த போவதாக மிரட்டல் விடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.பாகிஸ்தான் கராச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பவல்பூருக்கு, பாகிஸ்தான் விமானம் பிகே,586 நேற்று புறப்பட்டது. இதில் 50 பயணிகள் இருந்தனர். அப்போது ஒரு பயணி தகராறு செய்வதாகவும், விமானத்தை கடத்த போவதாக மிரட்டல் விடுப்பதாகவும் பைலட்டிடம் பணிப்பெண்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு காத்திருந்த விமான பாதுகாப்புப் படையினர், சம்பந்தப்பட்ட அந்த பயணியை சுற்றிவளைத்தனர். விமானத்தை சோதனையிட்டனர்.இதுகுறித்து பாதுகாப்புப் படை உயரதிகாரி பரூக் கூறுகையில், மிரட்டல் விடுத்த பயணியின் பெயர் ஜாவீத். அவரிடம் எந்த ஆயுதங்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment