Saturday, April 28, 2012

இலங்கை விமானப் படைக்குச் சொந்த மான அன்டனோவ் 32 ரக விமானத்தை வில்பத்து காட்டுப் பகுதியில் வீழ்த்திய புலி சந்தேக நபர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

Saturday, April, 28, 2012
இலங்கை::இலங்கை விமானப் படைக்குச் சொந்த மான அன்டனோவ் 32 ரக விமானத்தை வில்பத்து காட்டுப் பகுதியில் வீழ்த்திய புலி சந்தேக நபர்கள் இருவருக்கு விளக்கமறியல்:-

மதவாச்சி, இலங்கை விமானப் படைக்குச் சொந்த மான அன்டனோவ் 32 ரக விமானத்தை வில்பத்து காட்டுப் பகுதியில் வைத்து ஏவுக ணைத் தாக்குதலை மேற்கொண்டு வீழ்த்தி யதில் விமானி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரக சியப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட புலி இயக்கத்தைச் சேர்ந்த இருவரையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற நீதிவான் ருவன்திகா மாரப்பன உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமா கக் கொண்டவர்களாவர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் அறிக்கை களை எதிர்வரும் தினத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் இரகசியப் பொ லிசாருக்கு மேலும் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் 2000 ஆம் ஆண்டு மார்ச் மா தம் 30 ஆம் திகதி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment