Saturday, April, 28, 2012
இலங்கை::கடத்தல் சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.
கடத்தல் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றதாகவும், தற்போது அதிகளவில் ஊடகங்களில் கடத்தல்கள் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 95 வீதமான வேன்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் வெள்ளை வான்களில் நபர்களைக் கடத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவரையும் கைது செய்ய வேண்டுமாயின் சட்ட ரீதியில் கைது செய்யக் கூடிய அதிகாரம் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக கடத்தல்கள் மற்றும் விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களை விடவும் கடத்தல் சம்பவங்களுக்கு தற்போது ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்த காலமாக யுத்தம் பற்றிய செய்திகள் வெளியானதாகவும் தற்போது சமாதானம் நிலவி வருவதனால் ஊடகங்கள் கடத்தல் சம்பவங்களை முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைவான் கடத்தல் பீதியை ஊடக நிறுவனமொன்றே உருவாக்கியது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக பிரேம்குமார் குணரட்னம் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரேம்குமார் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்களிலும் எவ்வித உண்மையும் கிடையாது என லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment