Wednesday, March 28, 2012

எதிர்க்கட்சிகளின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்வதா TNA கூடி ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுக்கவுள்ளது!

Wednesday,March,28,2012
இலங்கை::யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பொது எதிர்க்கட்சிகளின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுக்கவுள்ளது.

பொது மேதினக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவது தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பிரமுகர்களான மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ண, திஸ்ஸ அத்தநாயக்க, ஜயலத் ஜயவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல, தயாகமகே, ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலை வர் சம்பந்தன், பொது மேதினக் கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்துகொள்வது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது எனவும், வெகுவிரைவில் இது தொடர்பில் அறி விக்கப்படுமெனவும் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கியதேசியக் கட்சியினால் நடத்தப்படும் பொது மேதினக் கூட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்பு கலந்து கொள்வது குறித்து மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் இருக் கின்றன. எனவே, அவர்களு டன் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளது என்று இந்தக் கூட்டத்தில் சம்பந்தன் எம்.பி. தெரிவித் திருக்கிறார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொது எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்தக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் பங்களிப்பும் இருக்கு மாயின் அது மிகவும் வரவேற் கத்தக்கதாக இருக்குமென இங்கு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. தலைவர், கூட்டமைப்பு ஆராய்ந்து சாதகமான ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு கேட்டிருக்கிறாரெனத் தெரிவிக் கப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பொது எதிர்க்கட்சிகளின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுக்க விருக்கிறது.

பொது மேதினக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவது தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பிரமுகர்களான மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ண, திஸ்ஸ அத்தநாயக்க, ஜயலத் ஜயவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல, தயாகமகே, ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலை வர் சம்பந்தன், பொது மேதினக் கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்துகொள்வது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது எனவும், வெகுவிரைவில் இது தொடர்பில் அறி விக்கப்படுமெனவும் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கியதேசியக் கட்சியினால் நடத்தப்படும் பொது மேதினக் கூட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்பு கலந்து கொள்வது குறித்து மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் இருக் கின்றன. எனவே, அவர்களு டன் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளது என்று இந்தக் கூட்டத்தில் சம்பந்தன் எம்.பி. தெரிவித் திருக்கிறார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொது எதிர்க் கட்சிகள் நடத்தும் இந்தக் கூட்டத்திற்கு கூட்டமைப் பின் பங்களிப்பும் இருக்கு மாயின் அது மிகவும் வரவேற் கத்தக்கதாக இருக்குமென இங்கு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. தலைவர், கூட்டமைப்பு ஆராய்ந்து சாதகமான ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு கேட்டிருக்கிறாரெனத் தெரிவிக் கப்படுகிறது.

No comments:

Post a Comment