Wednesday, March 28, 2012

இலங்கையுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள அமெரிக்க ஆர்வம்!

Wednesday,March,28,2012
இலங்கையுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அமெரிக்க வர்த்தகப் பிரமுகர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

அமெரிக்காவின் துணை வர்த்தகப் பிரதிநிதி மிச்செல் டிலேனியி;ன் தலைமையில் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த வலிகோலும் என தூதரக அதிகாரி வெலரி பிளவர் தெரிவித்துள்ளார்.

உணவு உதவி, மனிதாபிமான உதவி, நிலக்கண்ணி வெடி அகழ்வு, அனர்த்த நிவாரணம், தனியார் அரச துறைகளுக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment