Wednesday,March,28,2012
இலங்கை::வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அமெரிக்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த தகவலை அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நியூலேன்ட் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் அமைச்சர் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி அமெரிக்காவிற்கு வருகை தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அமைச்சர் ஜீ எல் பீரிஸ் ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனை சந்திக்கவுள்ளார்.
இந்தவிடயம் தொடர்பாக எமது செய்தி பிரிவு வெளிவிகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகமவிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், அமைச்சர் ஜீ எல் பீரிஸின் அமெரிக்க விஜயம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவித்தார்.

No comments:
Post a Comment