இலங்கைக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையென வாக்களித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையில்லையென வாக்களித்ததன் மூலம் அதன் இரட்டை வேடம் அம்பலம் - அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா!
Friday, March,30, 2012
இலங்கை::ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவது தொடர்பில் அரசாங்கம் எதுவித முடிவும் எடுக்கவில்லை.
இலங்கைக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையென வாக்களித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையில்லையென வாக்களித்ததன் மூலம் அதன் இரட்டை வேடம் தெளிவாவதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடாகவே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூறிய அமைச்சர், இதில் அங்கம் வகிப்பதினூ டாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்ட முடியும் எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
ஜெனீவா பிரேரணை தொடர்பாகவும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை என்பன பற்றியும் ஊடகவியலா ளர்கள் கேள்வி எழுப்பினர்.
இவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர், மனித உரிமைப் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அந்த நாடு நிராகரித்துள்ளது. தமது நாட்டுக்கு கண்காணிப்பாளர் குழுவினர் வருவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 36 நாடுகளும் எதிராக அமெரிக்காவுமே வாக்களித்தன.
இலங்கைக்கு வெளிநாட்டு தலையீடு தேவை என பிரேரணை முன்வைத்து ஆதரவாக வாக்களித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையில்லையென எதிராக வாக்களித்தது. இதன் மூலம் அதன் இரட்டை வேடம் தெளிவாகிறது.
ஒவ்வொரு நாடு தொடர்பிலும் ஒவ்வொரு விதமாக நடந்து வருகிறது. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதாலே அமெரிக்காவின் பிரேரணையின் போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்ததாக மலேசியா அறிவித்துள்ளது.
இஸ்ரேலைப் போன்று நாமும் மனித உரிமைப்பேரவையில் இருந்து விலக இது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அமைச்சரவையிலும் இது தொடர்பில் எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பல்ல.
ஜெனீவா தீர்மானம் தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும். இது தொடர்பில் இன்னும் அமைச்சரவை முடிவு செய்யவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எமக்கே உரிய தனித்துவப்படி நாம் முன்னெடுப்போம். இதற்கு கால எல்லையோ கட்டுப்பாடோ கிடையாது. இதில் நீண்டகாலம் தேவைப்படும் பரிந்துரைகளும் உள்ளன. சில பரிந்துரைகளை செயற்படுத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாக இறுதி முடிவு எட்டப்பட வேண்டும். சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சு நடத்தி வடபகுதிக்கோ தென்பகுதிக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கக் கூடிய தீர்வு எட்டப்பட வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டும். தமது பிரச்சினைகளுக்கு இதனூடாகவே தீர்வு பெற முடியும்.
பாராளுமன்றத்தில் உள்ள மிக உயர்ந்த இடம் இந்த தெரிவுக்குழுவாகும். இங்கு தமது தரப்பு விடயங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு முன்வைக்க அவகாசம் உள்ளது. இதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வு எட்ட முடியும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயும் பிளவு காணப்படுகிறது.

No comments:
Post a Comment