Friday, March 30, 2012

புனர்வாழ்வு பெற்று வெளியேறும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு- ஏ. திஸாநாயக்க!

Friday, March,30, 2012
இலங்கை::புனர்வாழ்வு பெற்று வெளியேறும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொழில்சார் பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு என். வி. கியூ. தரச்சான் றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும் பில் நடைபெற்றது. இந்நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

மேசன் தொழில், தச்சுத்தொழில், குழாய் பொருத்துதல், இயந்திரங்களைத் திருத்துதல், வெளிக்கள இயந்திர இணைப்பு உள்ளிட்ட தொழில்சார் பயிற்சிபெற்ற 103 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஜீ.ஐ.சட், ஹொல்சிம் சீமெந்து நைடா, பி.ரி.ஐ. புனர்வாழ்வு ஆணையகம் ஆகியன இணைந்து இவர்களுக்கு இந்தப் பயிற்சிகளை வழங்கியிருந்தன.

ஆறு மாதங்களைக் கொண்ட இந்தப் பயிற்சி நெறிகளை கந்தாடு புனர்வாழ்வு முகாமில் 193 பேர் தொடர்ந்துள்ளனர். இவர்களில் 103 பேருக்கே நேற்று முன்தினம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எஞ்சிய 95 பேரும் பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்ததும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

என். வி. கியூ. தரச்சான்றிதழுடன் வாழ்க்கைத் தொழில்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஆயுதங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர செயலாளர் ஏ. திஸாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் டி.யூ.கே. ஹெட்டியாராச்சி, ஹொல்சிம் சீமெந்து நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜி.ஐ.சட். நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர், நைடா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மனிதாபிமான நடவடிக்கையின் போது சரணடைந்தவர்களில் 11 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்கு இவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 2000 ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தைச் செலவிட்டிருப்பதாகவும் கூறினார்.

பயிற்சி நெறிகளைப் பெற்றவர்களுக்குத் தொடர்ந்தும் உதவிகளைச் செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. இவர்களுக்க வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுடன் தமது அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment