Thursday, March, 29,2012
சென்னை::எம்ஜிஆர் யாருக¢கு சொந்தம் என அதிமுக, தேமுதிக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடந்ததால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது. சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அதிமுக, தேமுதிக இடையே அனல் பறக்கும் விவாதம் நடந்தது. அதன் விவரம்: தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன்: கடைக்கோடி தொண்டர்களை காப்பாற்றும் தலைவராக விஜயகாந்த் உள்ளார். முதல்வர் ஜெயலலிதா: கடைக்கோடி தொண்டர்களையும் காப்பாற்றும் தலைவர் என்கிறார். ஆனால் அவர் தொண்டரை பளார், பளார் என்று அடித்தார். இது தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. இதை உலகமே பார்த்தது. இது தான் தொண்டர்களை காப்பாற்றும் லட்சணமா?. முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று குரல் எழுப்பினர். சபாநாயகர் ஜெயக்குமார்: அடித்ததை உலகமே பார்த்தது, டிவியில் கூட வந்தது. அமைச்சர் முனுசாமி: இந்த அவையில் நாக்கை துருத்தி கொண்டு அடிக்க பாய்ந்தார். இது நாகரீகமான செயலா? இதற்கு தேமுதிக உறுப்பினர் பாண்டியராஜன் ஒரு கருத்தை சொன்னார் ஆனால் அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்கள் மீண்டும் எழுந்து நின்று குரல் எழுப்பினர். அமைச்சர் செங்கோட்டையன்: ஒப்பற்ற தலைவி, எதிர்கால இந்தியாவை ஆள கூடியவர் ஜெயலலிதா. அவரிடம் ஆசி பெறுவது வேறு, தொண்டர்களை அடிப்பது வேறு. அமைச்சர் வைத்தியலிங்கம்: எம்ஜிஆர் பெயரை நீங்கள் (தேமுதிகவினர்) பயன்படுத்துகிறீர்கள். அவர் பெயரை சொல்ல யோக்கியதை, தகுதி, அருகதை இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): எம்ஜிஆர் ஒரு பொதுவான தலைவர். அனைவருக்கும் பொதுவானவர். முனுசாமி: பண்ருட்டி ராமச்சந்திரனின் தலைவர் விஜயகாந்த். அவரை வைத்து அவர் அழகு பார்க்கட்டும். எம்ஜிஆர் பெயரை தேமுதிகவினர் பயன்படுத்தக் கூடாது. பண்ருட்டி ராமச்சந்திரன்: ஒரு தவறான எண்ணத்தை மன்றத்தில் பதிவு செய்யக்கூடாது. முனுசாமி: எம்ஜிஆருக்கு கொள்கை இருந்தது. ஜெயலலிதாவுக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஒரு தலைவரை மாற்றுவது பச்சோந்தி தனம¢. பண்ருட்டி ராமச்சந்திரன்: கோயில் என்றால் எல்லோரும் சொந்தம் கொண்டாடலாம். இவ்வாறு, சுமார் 20 நிமிடம் காரசார விவாதம் நடைபெற்றது. இதனால் அவை பரபரப¢பாக காணப்பட்டது.

No comments:
Post a Comment