Friday, March,30, 2012
மதுரை::மதுரை பொதுநல வழக்குகள் மைய மேலாண்மை அறங்காவலர் ரமேஷ். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: இலங்கை கடற்படையினரால் மார்ச் 25 ல் நாகபட்டிணம், ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டனர். இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டது. 1983 லிருந்து 1500 இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், ஆர்.கருப்பையா கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்திற்குள் பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment