Thursday,March,29,2012
இலங்கை::அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாட்டின் அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு, ஆதரவாக, மனித உரிமை பேரவையில் பல நாடுகள் வாக்களித்தமையானது பாரிய வெற்றி என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் பல நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளாமல், ஒதுங்கியதும் இலங்கைக்கு கிடைக்க வெற்றியெனவும் அவர் கூறியுள்ளார். உலகில் சகல நாடுகளுடனும் நட்புறவாக செயற்பட்டு, எந்த அணிக்கும் சாராது இருப்பது, தொடர்பில் இலங்கை பெற்றுள்ள பலத்தை ஜெனிவா மனித உரிமை பேரவையில் உலகத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் ஏற்படும் செயற்பாடுகள் தொடர்பில் கட்சி என்ற வகையில் ஜனநாயக இடதுசாரி முன்னணி தயார் நிலையில் இருக்கும் எனவும் அந்த கட்சியின் செயலாளருமான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment