Thursday, March 29, 2012

புலிகள் சூடானைப் போன்ற பிளவை இலங்கையில் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் – அரசாங்கம்!

Thursday,March,29,2012
இலங்கை::புலிகள் சூடான் நாட்டில் போன்ற பிளவினை இலங்கை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருவதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாத சக்திகளுக்கு மேற்குலக நாடுகள் துணை நிற்கும் வரையில் இலங்கையில் மெய்யான நல்லிணக்கம் என்பது யதார்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்டும் முனைப்புக்களுக்கு புலம்பெயர் தமிழ் சமூகம் பெரும் தடையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சில சக்திகள் கடுமையான தாக்கத்தை செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் தமிழர் அமைப்புக்களும், சர்வதேச ஊடகங்களும் முரண்பட்ட புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டு வருவதகாக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்ஸ் போ ஒபாமா போன்ற அமைப்புக்கள் சர்ஜன வாக்கெடுப்பின் மூலம் இலங்கையை பிளவடையச் செய்யும் முனைப்புக்களை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் நடத்தப்பட்டதனைப் போன்றதொரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நாட்டை பிளவுபடுத்த சதித் திட்டம் தீட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரிவினைவாதத்தை தூண்டும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment