Thursday,March,29,2012
பீஜிங்::திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் பிடியில் இருந்து திபெத் விடுவிக்கப்பட்டதன், 53 வது ஆண்டை சீன அரசு நேற்று கொண்டாடியது.
சீனாவில் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பின் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, உள்நாட்டுப் போருக்குப் பின், 1949ல் நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தொடர்ந்து 1951ல் திபெத்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்து 1959ல், திபெத் தலைநகர் லாசாவில் பெரும் புரட்சி உருவானது. சீன ராணுவம் அதை முறியடித்தது. இதை நினைவு கூரும் வகையில், நேற்று திபெத் விடுதலை நாள் சீனாவில் கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து திபெத் சுயாட்சிப் பகுதியின் தலைவர் பத்மா சோலிங் இதுகுறித்துக் கூறுகையில்,"தலாய் லாமா மற்றும் திபெத் நாடு கடந்த அரசு, திபெத்தில் மீண்டும் நிலப்பிரபுத்துவத்தை கொண்டு வர முயல்கின்றனர். இந்த முயற்சிகள் என்றும் வெற்றிபெறப் போவதில்லை' என்றார். கடந்த 1959ல், திபெத்தில் இருந்த நிலப் பிரபுத்துவ முறையை ஒழித்து ஆயிரக்கணக்கான அடிமைகளை விடுவித்ததாக சீன அரசு கூறி வருகிறது. சீன அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, 1959, மார்ச் 29ம் தேதி அப்போதைய திபெத் அரசு கலைக்கப்பட்டது. கடந்த 2009ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, மார்ச் 28ம் தேதி, திபெத் விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சீனாவிடம் இருந்து திபெத் விடுதலை பெற முடியாது என்பது தெளிவாகிவிட்ட நிலையில், திபெத்திற்கு சுயாட்சியாவது வழங்க வேண்டும் என, நாடு கடந்த திபெத் அரசு கோரி வருகிறது. இதுவரை தலாய் லாமாவின் பிரதிநிதிகள் மற்றும் அரசுப்பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, சீன அரசின், சர்வதேச சீன ஆய்வு நிறுவனத்தின் தலைவர் க்யூ ஷிங் கூறுகையில்,"திபெத் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதை திபெத்திய தலைவர்கள் ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தை துவங்க வாய்ப்புள்ளது' என்றார்.
தீக்குளித்தவர் இறந்தார்: "பிரிக்ஸ்' மாநாட்டிற்காக, இன்று டில்லி வர உள்ள சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவின் வருகையை எதிர்த்து, நேற்று முன்தினம் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தீக்குளித்த திபெத் வாலிபர் ஜம்பா யெஷி, 26, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவருக்காக பிரார்த்தனை செய்வதற்காக, ஜந்தர் மந்தரில் நேற்று கூடிய திபெத்தியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் அவர்களைக் கைது செய்தனர். திபெத் பிரச்னையில் தீக்குளித்த 31வது நபர் யெஷி. அவரது அறையில் இருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அதில்,"திபெத்தியர்களின் துன்பங்களையும், அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவதையும், உலகிற்கு உணர்த்தத் தான் தீக்குளிப்புகள் நடக்கின்றன' என, யெஷி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment