Thursday, March 29, 2012

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் போராளிகளுக்கு விசேட கடன் திட்டம்!

Thursday,March,29,2012
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் போராளிகளுக்கு உதவும் வகையில் விசேட கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தக் கடன் திட்டம் இன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த 328 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று சமூகமயப்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை வெள்ளவத்தை இராமகிருஷ்ன மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான கடன் திட்டமும் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

புதிய கடன் திட்டத்திற்கு அமைய புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரை கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் வருடத்தில் மாத்திரம் நான்கு வீத வட்டி அறிவிடப்படும் எனவும் 10 ஆண்டுகளுக்குள் கடன் தொகையை மீளச் செலுத்த முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment