Thursday,March,29,2012
டெல்லி::பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல்விந்த் சிங் ரஜோனாவுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து கருணை மனு கொடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று கொலையாளிகளுக்கும் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த 1995ம் ஆண்டு பியாந்த் சிங் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ரஜோனாவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்ட்டது. இதை மார்ச் 31ம் தேதி நிறைவேற்றுமாறு கூறி கடந்த 5ம் தேதி சண்டிகர் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து பஞ்சாபில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேற்று குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினார். பியாந்த் சிங் கொலையாளிக்கு கருணை காட்டுமாறு கோரி கருணை மனுவை வழங்கினார். இதைப் பெற்றுக் கொண்ட பிரதீபா பாட்டீல், அதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து ரஜோனாவை தூக்கில் போடுவதை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக பாதல் தெரிவித்துள்ளார்.
ரஜோனாவை தூக்கில் போட்டால் பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு கருதுவதாக முன்னதாக குடியரசுத் தலைவரிடம் பாதல் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ராஜீவ் கொலையாளிகளுக்கு புது நம்பிக்கை:-
ரஜோனா விவகாரத்தால் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரைக் காக்க போராடி வருவோர் தரப்பில் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. ரஜோனாவுக்குக் காட்டிய கருணையைப் போல ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கும் மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் கருணை காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், பாதலைப் போலவே, முதல்வர் ஜெயலலிதாவும், குடியரசுத் தலைவரை இதுதொடர்பாக சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு எழுந்துள்ளதாம்!!.

No comments:
Post a Comment