Wednesday,March,28,2012
புதுடெல்லி::இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்தி, அப்பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடைடெபறுவதற்கான வழியை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசு ஓரளவேனும் விடுபட முடியும் என இந்தியா, இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வடக்கில் இராணுவ நெருக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி அடைவதற்கு முன்பு அங்கு தேர்தலை நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அப்பகுதி நிர்வாகத்தை ஒப்படைப்பதால், தற்காலிகமாக மக்கள் இராணுவ நெருக்குதல்களில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ வழி ஏற்படும் என்று இலங்கைக்கு இந்தியா சுட்டிக் காட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஷயத்தை மறைமுகமாகவும், சூசகமாகவும் இலங்கை அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ள இந்திய அரசு, விரைவில் இது குறித்து பகிரங்க கோரிக்கை ஒன்றை வைக்கப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment