Wednesday, March 28, 2012

நல் ஆழுகை மன்றத்திற்கு கிழக்கு முதலமைச்சரினால் நிதி ஒதுக்கீடு!

Wednesday,March,28,2012
இலங்கை::திருகோணமலை நல்ஆழுகை மன்றத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தனது அமைச்சின் நிதியிலிருந்து சுமார் 5லட்சம் ருபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேற்படி மன்றமானது தொழில் பயிற்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதாவது வேலைவாப்பற்று இருக்கின்ற யுவதிகளை இனைத்து அவர்களுக்கான கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்தல் பற்றிய பயிற்சி நெறிகளை வழங்கி அவர்களுக்கான தொழில்வாய்ப்பினை மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பான அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று (26.03.2012) திருகோணமலை கடலூர் கிராமத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பல்வேறு கைப்பணி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் புதிதாக இணைந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கான பயிற்சிநெறிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் முதல்வரினால் பல்வேறு தொழிற்சாதனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கு.நளினகாந்தன், முதலமைச்சர் செயலக திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன், மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் கணக்காளர் அன்ரனிதாஸ், பிரதேசத்தின் மீன்பிடி தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment