Friday, March,30, 2012
இலங்கை::தெற்காசியாவின் பெரியண்ணன் என்ற அந்தஸ்தை இழந்துள்ள இந்தியா இன்று ''பெரிய அக்காவாக'' மாறி அமெரிக்காவிடம் மாப்பிள்ளையெடுத்து இலங்கைக்கு துரோகமிழைத்துள்ளது என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் நட்புறவு ''இனி'' வேண்டாமென்றும் ஹெல உறுமய திட்டவட்டமாக கூறியது. இது தொடர்பாக ஜாதிகஹெல உறுமயவின் குழு உறுப்பினரும் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் கருத்து தெவிக்கையில், இந்தியா இலங்கையின் அயல் நாடு, வரலாற்று நட்புறவு கொண்ட நாடு, தெற்காசியாவின் பெரியண்ணன் என்ற அந்தஸ்தையெல்லாம் தனது காட்டிக் கொடுப்பால் இழந்துவிட்டது.
இனிமேல் தெற்காசியாவின் 'ஒரு நாடு' என்பதே நிரந்தரமானதாகும். 'பெரியண்ணன் பெரிய அக்காவாக' மாறிவிட்டது. அதன் பிரகாரம் அமெரிக்க மாப்பிள் ளையை திருமணம் செய்து அந்நாட்டிற்கு அடிமையாகியுள்ளதோடு ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெக்காவிற்கு ஆதரவு வழங்கியது.
இப் பிரேரணையானது இந்தியாவின் ஆலோசனை மற்றும் பூரண ஆதரவுடனேயே கொண்டு வரப்பட்டது. எனவே இனிமேல் இந்தியாவின் நட்புறவு எமக்கு அவசியமில்லை.
ஆசிய நாடுகள் அனைத்தும் எமக்கு ஆதரவு வழங்குகையில் இந்தியா முதுகில் குத்திவிட்டது. இதனால் இலங்கையின் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் இந்தியாவிற்கு எதிரான மனோநிலை தோன்றியுள்ளது.எமது நாட்டில் இந்தியன் எண்ணெய் நிறுவனங்கள் 100 அமைப்பதற்கு இடமளிக்கப்பட்டது. அதிகளவிலான முதலீடுகளுக்கும் வசதிகள் வழங்கப்பட்டன. இனிமேல் இலங்கையில் எந்தவொரு முதலீட்டுக்கும் இடமளிக்கக் கூடாது. அத்தோடு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
அது மட்டுமல்லாது மருந்து வகைகளை அதிகளவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். இதனை தவிர்த்து வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும்.மொத்தத்தில் இந்தியாவுடன் எந்தவொரு நட்புறவும் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment