Friday, March,30, 2012
இலங்கை::வடமாகாண மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு, தமிழ் அரசியல் பிரதிநிதிகளை தேசிய பட்டியல் ஊடாக நியமிக்க வேண்டும் என, தேசிய சுதந்திர முன்னணினி தெரிவித்துள்ளார்.
கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பியசிரி விஜேநாயக இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்;களுக்கு தமது பிரச்சினைகளை முறையிடுவதற்கு சரியான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை.
அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவை தவிர வேறு யாரும், தமிழர்களின் பிரச்சினையை கேட்கக்கூடியவர்கள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிவினை வாதத்துடன் காணப்படுவதால், அவர்களிடம் சென்று தமது பிரச்சினைகைளை மக்கள் கூறுவதால் எந்த பலனும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையில், ஏனைய மாவட்டங்களின் தேசிய பட்டியல்நடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி வடமாகாண பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் கோரினார்.
தேசிய சமாதானத்தை ஏற்படுத்தவும், வல்லரசு நாடுகளுக்கு முகம் கொடுக்கவும் இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும் என என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க, தமிழ் பிரதிநிதிகளை தேசிய பட்டியல் ஊடாக நியமிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு அரசியல் யாப்பில் இடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஜெனீவா பிரேரணையில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளே உள்ளீடாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்தியா இந்த விடயத்தில் சரியான தீர்வை மேற்கொண்டதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த பிரேரணையில் இலங்கையின் ஆணைக்குழு ஒன்றின் பரிந்துரைகளே காணப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், இதனை அமுல்படுத்துவதால், எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment