Friday, March 30, 2012

மனித உரிமைப் பேரவை பொறிமுறைமையை அமெரிக்கா மதிக்கவில்லை – ஜீ.எல்.பீரிஸ்!

Friday, March,30, 2012
இலங்கை::மனித உரிமைப் பேரவை பொறிமுறைமைகளை அமெரிக்கா மதிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் எழுப்ப மாற்று பொறிமுறைமை ஒன்று அவசியம் என அமெரிக்க வெளிவிவகார கமிட்டியின் பொறுப்பதிகாரி இலியான ரோஸ் லெதினன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் தொடர்பான மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமெரிக்கா எதிர்த்து வருவதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கொள்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், அரசியல் நோக்கங்களைக் கருத்திற் கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனித உரிமை பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் போன்ற சலுகைகள் மறுக்கப்பட்ட போதிலும் நாடு பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாக்க முயற்சி மற்றும் தரமான உற்பத்தி ஆகிய ஏதுக்களினால் சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை தொடர்ந்தும் வெற்றிகளை ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment