Thursday, February 02, 2012
வாஷிங்டன்::எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளால், இந்தியா கவலை அடைந்துள்ளது என்றும், அதனால், சிறு சிறு மோதல்களை எதிர்கொள்ளும் வகையில், தனது ராணுவத்தை பலப்படுத்தியுள்ளது என்றும், அமெரிக்க புலனாய்வுத் துறை உயர் அதிகாரி ஜேம்ஸ் கிளாப்பர் தெரிவித்துள் ளார்.
அமெரிக்க செனட் சபையில், தேசிய புலனாய்வுத் துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், இதுகுறித்து நேற்று பேசியதாவது: தங்களுக்கு இடையிலான பதட்டங்களை குறைக்கும் வகையில், இந்தியாவும், சீனாவும் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. ஆனாலும், எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளும், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசிய பசிபிக் மண்டலத்தில், சீனாவின் ஆதிக்கப் போக்கும் இந்தியாவுக்கு கவலை அளிப்பதை, நாம் காண முடிகிறது. இரு நாடுகளுக்கிடையிலான பெரும் மோதல் உடனடியாக வராது என்றே, இந்திய ராணுவம் நம்புகிறது. எனினும், அவ்வப்போது எல்லைகளில் ஏற்படும் சிறு சிறு மோதல்களை எதிர்கொள்ளும் வகையிலும், இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையிலும், இந்திய ராணுவம் தன்னை பலப்படுத்தி வருகிறது.
தனது அண்டை நாடுகள் மற்றும் உலகத்துடன் அமைதியான யதார்த்த வெளியுறவு கொள்கையைக் கடைபிடிப்பதாக, சீனா கூறிக் கொள்கிறது. ஆனால், தனது இறையாண்மை அல்லது தேசியப் பாதுகாப்புக்கு ஏதாவது சவால் ஏற்படும் என சந்தேகப்படும் பட்சத்தில், தான் கூறியதற்கு நேர் மாறாக நடந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. ஆசியாவில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக சீனா, தனது ராணுவத்தை அதிக செலவில் நவீனமயமாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானின் மறுகட்டமைப்பில் உதவும் முதல் மூன்று நாடுகளுள் ஒன்றாகவும், ஐந்தாவது நன்கொடையாளராகவும் இந்தியா உள்ளது. பாகிஸ்தான் உடனான தனது உறவுகளை நேர்மறையாக வைத்துக் கொள்ளவே, அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் சில நேரங்களில், இந்தியாவை தனது எதிரியாக இன்னும் பாக்., கருதுவதால், அதன் உடனான உறவுகள் குறித்து, அமெரிக்கா ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. கடந்தாண்டில், பாகிஸ்தானில் இருந்த தலிபான் அமைப்பினர், தங்கள் களத்தை இழந்துவிட்டனர். எனினும், அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் தான் சவுகரியமாக உள்ளனர். இவ்வாறு கிளாப்பர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment