Thursday, February 2, 2012

தமிழ்நாடு நோக்கிச் செல்கின்ற இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை!

Thursday, February 02, 2012
சென்னை::தமிழ்நாடு நோக்கிச் செல்கின்ற இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தாம் தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தி ஹிந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், தமிழகத்தின் சில வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பெண் பிரதியமைச்சர் ஒருவரின் கணவரான திருக்குமார் நடேசன் மீது தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment