Thursday, February 02, 2012
இலங்கை::கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போன 6 இலங்கை மீனவர்கள் சோமாலிய கடற் கொள்ளையர்கள் வசம் இருப்பதாகவும் இம்மீனவர்களை விடுதலை செய்ய கடற்கொள்ளையர்கள் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கப்பமாக கோருவதாகவும் மீனவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தனது சகோதரருடன் சேர்த்து 6 மீனவர்கள் நீர்கொழும்பு கடலில் மீன்பிடிக்கச் சென்று ஒரு மாதங்களின் பின் அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நிரோசன் அந்தோணி என்பவர் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரனான சாந்த செபஸ்டியன் உள்ளிட்ட 6 மீனவர்களை விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பம் கோருவதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வழங்காவிட்டால் அவர்களை கொலை செய்வதாக அச்சுறுத்துவதாகவும் நிரோசன் அந்தோணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொலைபேசியில் அவர்கள் உரையாடும்போது துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களும் கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை வசதிகளற்ற தாங்கள் என்ன செய்வதென்பதை அறியாது இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீனவர்களை காப்பாற்ற சோமாலிய அரசு உதவ முடியாது என தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment