Wednesday,February,01,2012
புதுடெல்லி::மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போல பெண்களை அச்சுறுத்தும் இன்னொரு புற்றுநோய் பற்றி பகீர் தகவல்கள் கூறியிருக்கின்றனர் டாக்டர்கள். அது ‘சாரி கேன்சர்’. அதாவது, பாவாடையை ஒரே இடத்தில் அழுத்தி கட்டுவதால், தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோயாக மாறலாம் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். நாடு முழுவதும் 1.80 லட்சத்துக்கும் அதிகமான டாக்டர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு ‘இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்’. இதன் சார்பில் நவம்பரில் வெளிவந்த மருத்துவ இதழில் மும்பை கிரான்ட் மருத்துவ கல்லூரியின் ஆபரேஷன் பிரிவு அசோசியேட் பேராசிரியர் டாக்டர் ஜி.டி.பாக்ஷி ஒரு மருத்துவ கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பெண்களை கடந்த சில ஆண்டுகளாக இடுப்பு புற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இடுப்பில் ஒரே இடத்தில் புடவை, பாவாடையை தினமும் அழுத்தி கட்டுவது இதற்கு முக்கிய காரணம். இது ‘சாரி கேன்சர்’ என்று குறிப்பிடப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சாரி கேன்சரால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு மும்பை கிரான்ட் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 3 மாதம் முன்பு இன்னொரு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள் 3 பேருமே 40 வயதை கடந்தவர்கள்.
பெண்கள் ஆண்டுக் கணக்காக ஒரே இடத்தில் அழுத்தமாக பாவாடை, புடவை கட்டுவதால் இடுப்பில் ஒரு வித எரிச் சல் ஏற்படுகிறது. நாளடைவில் தோல் நிறம் மாறி, கருப்பு தழும்பு ஏற்படும். இதை பெண்கள் அலட்சியமாக விட்டுவிடுகின்றனர். அரிப்பு, உணர்ச்சியற்ற நிலை, அதிகமான எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால்தான் டாக்டரை பார்க்கின்றனர். இது தொடர்ந்தாலோ, உரிய சிகிச்சைகள் எடுக்காமல் விட்டாலோ நாள்பட்ட புண்ணாக, புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, பேன்ட் அணியலாம். அல்லது, பாவாடையை சற்று தளர்வாக கட்டலாம். மெலிதான, அழுத்துகிற நாடாவுக்கு பதிலாக பட்டையான நாடா பயன்படுத்தலாம். பாவாடையை ஒரே இடத்தில் அணியாமல், ஏற்றி இறக்கி அணியலாம். புடவை அணிபவர்களில் 3 சதவீதம் பேர் இடுப்பில் அரிப்பு, தழும்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவது வாடிக்கை. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் விடுபடுவது எளிது. இவ்வாறு கட்டுரை யில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment