Wednesday, February 1, 2012

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

Wednesday,February,01,2012
இலங்கை::முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா முதலாவது நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த ஆட்சேபத்தை ஏற்றுக்கொள்ளாமை தொடர்பில் செயயப்பட்டுள்ள மேன்முறையீடு இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டது.

மேன் முறையீட்டு நிதிபதிகளான எல். ரஞ்சித் சில்வா மற்றும் எச்.என்.ஜேபெரேரா ஆகியோர் முன்னிலையில் இந்த மேன் முறையீடு விசாரணைக்காக அழைக்கப்பட்டது.

இதற்க சமமான மற்றுமொரு வழக்கு தொடர்பில் சரத் பொன்சேகா உயர் நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்துள்ளதாக அவர் சார்பாக பிரசன்னமாகிய சட்டத்தரணி ஷானகே குரே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது அதில் தெரிவிக்கப்படும் விடயங்கள் முக்கியமானவை என்பதால் மேன்முறையீட்டு மனு விசாரணையை பிற்போடுமாறு சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவிக்காத காரணத்தால் விசாரணை மே மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

No comments:

Post a Comment