Wednesday, February 1, 2012

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 40 ஊராட்சியில் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு!

Wednesday,February,01,2012
காஞ்சிபுரம்::காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் அங்கம்பாக்கம், மோசரவாக்கம், காலூர், ஆர்பாக்கம், ஆரியபெரும்பாக்கம், தாமல், திருப்புலிக்குழி, கருப்படை, கட்டடை உள்பட 40 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று அரசுக்கு நீண்டகாலமாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் தும்பவனம் ஜீவானந்தம் தலைமையில் நடந்தது. இதில் 40 ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நிதி ஒதுக்க வேண்டும் என்று திட்ட அறிக்கை தயாரித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடியே 4 லட்சத்து 90 ஆயிரம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவர் ஜீவானந்தம், துணைத் தலைவர் விசுவநாதன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் கலெக்டர் ஹனீஸ் சாப்ராவை சந்தித்து நன்றி தெரிவித்தனர். குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க டெண்டர் விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment